| தமிழ்த்தாயே மரம் தாங்கும் மண்ணாய் இலை தாங்கும் மரமாய் காய் தாங்கும் கொடியாய் சேய் தாங்கும் தாயாய் நீயே தாய் நாங்கள் சேய் ஈழத்தின் முடிவிலா கொலைகள் கண்டு முடியாமலே போகிறது உன் இரங்கற்பா.. ! ஈழத்திற்காக இறந்தவர்கள் எல்லோரும் சிதை சிதைந்து போகவில்லை விதை விதைத்து போயிருகிறர்கள்...! | ![]() |
| இரமேஸ்வரத்தில் எல்லோரும் குளித்து கரை ஏறுகிறார்கள் நாங்கள் குதித்து கரை ஏறுகிறோம் பிறந்த குழந்தைய்ன் நெற்றியில் வைக்கிறாள் பிடி மண்ணாய் கொண்டு வந்த தாய் மண் கடல் கடந்து பார்க்க வந்ந்திருக்கின்றன சோறு வைத்த காக்கைகள் படகில் ஏறினோம் படகை விற்று ஆழிப் பேரலைகளும் எங்கள் பெண்களை வீடு புகுந்து இழுத்து போய் கொல்லத்தான் செய்தன ஆனாலும் இலங்கை வானொலியில் இருந்து நீங்கள் பிறந்த நாள் வாழ்த்து கேட்கிறீர்கள் நாங்கள் மரண அறிவித்தல் கேட்கிறோம் முகாமிற்கு அருகில் உள்ள பள்ளியில் இருந்து கேட்கிறாது "யாதும் ஊரே யாவரும் கேளிர்" இப்படிக்கு வலிகளுடன் உங்கள் சொந்தங்கள் | ![]() |
| எனது ஈழக் கனவு தனித் தமிழீழம் வேண்டும் - அதில் தமிழினம் மட்டுமே வாழ வேண்டும். புரட்சி வெடிக்கும் முகத்தில் - துளிப் புன்னகை மலர வேண்டும். வெறியாட்டம் கண்ட கண்கள் - இனி வாண வேடிக்கைகள் காண வேண்டும். சயனைடு எடுத்தக் கைகள் - இனிச் சாகுபடி செய்ய வேண்டுமே தவிரச் சாகும்படிச் செய்யக்கூடாது. சாவுகளைக் கண்ட மனிதர்கள் - மனச் சாந்தத்தோடு வாழ வேண்டும். ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் - கடவுள் ஆலயம் நோக்கி நடக்க வேண்டும். வெடிகுண்டு ஏந்திய கைகள் - தமிழ் வெண்பாட்கள் இயற்ற வேண்டும். குண்டு விழுந்த கானகங்களில் - குயிலின் கானம் கேட்க வேண்டும். ஈழத்திற்காக உயிர்த் துறந்தவர்களை - எந்நாளும் தமிழினம் போற்றிப் பாட வேண்டும். மனிதர்களை வதைத்தவர் நெஞ்சில் - இனியாவது மனிதம் மலர வேண்டும். தனித் தமிழீழம் வேண்டும் - அதில் தமிழினம் மட்டுமே வாழ வேண்டும். | ![]() |
| விடியல்களின் வெளிச்சத்தில் விலாசம் தேடி விரைந்து கொண்டேயிருக்கிறது எங்கள் பயணம் ! இமைகளின் இடுக்கில் இழைகிற சோம்பலில் கருகப் பார்க்கிறது எங்கள் கனவு ! இடர்கள் மிகுந்துவிட்ட இருட்டுப் பயணத்தில் இன்னும் வளரத் துவங்கவில்லை எங்கள் நம்பிக்கை ஒளி ! வெற்றியை நோக்கிய வெறி கொண்ட ஓட்டத்தில் இனி ஓயப்போவதில்லை எங்கள் பாதங்கள் உலகை மறந்துவிட்ட உழைப்பின் உச்சத்தில் சிதறத்தான் போகிறது எங்கள் இலக்கு ! வியர்வையின் குளியலில் முயற்சியின் முடியலில் விடியத்தான் போகிறது எங்கள் ஈழம் ..! CJCKRXRDRTWH | ![]() |
| அலைகள் தழுவும் தேசத்தில் கொலைகள் தொடர்வதும் ஏனோ? விடுதலை வேண்டி வாழும் மாந்தர்க்கு உரிமை மறுப்பது தர்மம்தானோ? நாற்புறம் சூழ்ந்த கடல் நீரினிலே உவர்ப்பை நிறைத்தது எங்கள் கண்ணீர்தானோ? | ![]() |
| கால் நூற்றாண்டாய் காத்திருக்கிறொம் விடியலுக்காக... விடுதலைக்காக... எங்கள் பூமியை நீர் சூழ்ந்திருப்பதனால்தான் என்னவோ எங்கள் நம்பிக்கைகளும் நீர்த்துப் போய்விட்டன நிலுவையில் உள்ள எங்கள் நிம்மதி நிர்மூலம் ஆனதுதான் நிதர்சனம் போரினால் புண்பட்ட எங்கள் பூமி பண்படுவது எந்நாளோ? துவண்டு போயின எங்கள் உள்ளங்கள் காலமே! நீ செய்த நம்பிக்கைத் துரோகத்தால்... | ![]() |
ஈழம் நம் நாடு எந்த மனிதைனயும் வழக்கத்தை மாற்ற நினைப்பது தான் புரட்சியென்றால் களிப்புடன் அப்புரட்சியை பல முறை செய்வேன்...! தமிழின் கடைசி எழுத்து இறக்கும் வரை ஈழம் கவி பாடும்... ஈழம் வழியில் வரும் தடைகளை உடைத்தெரிவோம் ''ஈழம் நம் நாடு '' என்பதை உணர்ந்து முடிவில்லா புகழை இவ்வுலகில் பெறுவோம் | ![]() |
Subscribe to:
Comments (Atom)






